ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டு வண்டி பந்தயம் களைகட்டியது.
பம்மநேந்தலில் ஸ்ரீ குருநாத சுவாமி 48 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் பெரியநாச்சி அம்மன் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.