கடலூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெப்ப அலைக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை வெப்பம் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும் அபாயமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெப்பத்தால் பாதிப்படையும் நோயளிகளுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 படுக்கைகளும், வெப்ப பாதிப்புக்காக 10 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயார் நிலையில் உள்ளது.