தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியிலுள்ள கற்பக விநாயகர் கோயிலில் கோடாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கும்பகோணம் பகுதியில் கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத விழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் விரதமிருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர்.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.