சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் வெகு நாட்களாக நீடித்து வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெமினியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.