மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி மொத்தமாக 39 புள்ளி ஒன்பது இரண்டு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் கடந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் 3வது கட்டமாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் ஆயிரத்து 300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில், மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி மொத்தம் 39 புள்ளி ஒன்பது இரண்டு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 49 புள்ளி இரண்டு ஏழு சதவீதம் வாக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 44 புள்ளி ஆறு ஏழு சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.