திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் பேருந்து நடத்துனர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அரசுப் பேருந்து நடத்துநரான இவர், 17 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்.
இதற்கான மருத்துவ சான்றிதழ்களை பணிமனை அதிகாரியிடம் கொடுத்தபோது, அவர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த செல்வராஜ், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட பணிமனை ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.