மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காலாவதியான டின் பீரை குடித்த 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்னலக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரும் டின் பீர் வாங்கி குடித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் குடித்த டின் பீர் பாட்டிலை பார்த்த போது காலவதியானது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.