நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டடுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதகை, குன்னூர் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கவும், இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
இந்தநிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நீலகிரி பகுதிகளுக்கு செல்ல இ பாஸ் முறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், இன்று முதல் ஜூன் 30 ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. https://epass.tnega.org என்ற இணையத்தளம் மூலம் இ பாஸ் பெறும் நடைமுறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.