மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், திடீரென முன் சக்கரம் உடைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ம் தேதி பூச்சொறிதல் வைபவத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீமத் மகா மாரியம்மன் எழுந்தருளி திருத்தேரோட்டம் துவங்கியது.
தேர் மேல வீதி சந்திப்பில் திரும்பிய போது, திடீரென முன் சக்கரம் உடைந்தது. இதையடுத்து, புதிதாக சிறிய தேர் அமைக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
கோயிலுக்கு புதிதாக தேர் செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.