திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
நத்தம் அருகே துவராவதியைச் சேர்ந்த பாரதி என்பவர் சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது செங்கல் சூளையில் உள்ள குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.