அரியலூர் அருகே சித்திரை அமாவாசையையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.
பொய்யாதநல்லூரில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், அமாவாசையன்று சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை அமாவாசையையொட்டி, மூட்டை மூட்டையாக மிளகாய்களை கொட்டி சண்டியாகம் நடத்தப்பட்டது.
பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரால் பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.