பெரம்பலூர் அருகே மீன்பிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். செஞ்சேரி கிராம ஏரியில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் கோடை வெயிலால் செஞ்சேரி கிராம ஏரியில் நீர் வற்றியதால் மீன்பிடி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் செஞ்சேரி, பாளையம், குரும்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும், பாரம்பரிய முறைப்படி கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.