புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மான்கள் மீது, வனத்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்வித்தனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால் கால்நடைகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறது.
இதனையடுத்து வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் வனவிலங்குகளின் வெப்பத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மான்கள் உள்ளிட்டவை மீது தண்ணீரை பீய்ச்சியடித்த வனத்துறையினர், அவற்றுக்கு பசுந்தீவனங்களுடன் வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.