கடலூர் சுற்றுவட்டாரங்களில் 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடலூர் முதுநகர், சான்றோர் பாளையம், சுத்துகுளம் உள்ளிட்ட இடங்களில், கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே உடனடியாக 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.