விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலம் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வம், ஜெலீஸ்கான் ஆகிய இரு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.