செக் மோசடி வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நேரில் ஆஜரானார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் தமக்கு 15 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 14 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக, தேவிபட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணைக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.