நீலகிரி மாவட்டத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
கல்லார், கக்க நல்லா, கீழ்நாடுகாணி, பாட்டவாயல் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் உதகையில் 126-வது மலர்கண்காட்சி தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்நோக்கியுள்ளனர்.