திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதால் பாலாற்றுக்கு செல்லும் வழியை அப்பகுதி மக்கள் வாயிற்கதவு அமைத்து அடைத்தனர்.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம், ஈச்சங்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் பாலாற்றில் பல நாட்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாலாறுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.