தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!
Sep 2, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் புகார் மனு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :, தற்போது, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் மாநிலம் முழுவதும் தீவிரமாக விஜய் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

30/03/2026 அன்று, பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ததையடுத்து, தேவையான அனுமதிகளைப் பெற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அன்று, பெரம்பூரில் நடைபெற்ற பிரசாரத்தை முடித்த பின்னர், அடுத்த பிரசார நிகழ்விற்காக கொளத்தூர் தொகுதிக்குச் செல்லும்போது, பாதுகாப்பான மற்றும் தடையற்ற VIP வாகன அணிவகுப்பிற்காக தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது கவலையுடன் கவனிக்கப்பட்டது.

போலீஸ் எஸ்கார்ட், போக்குவரத்து கட்டுப்பாடு, வழிநடத்தல் ஆகியவை இல்லாத காரணத்தால், பொதுமக்கள் பெரும் திரளாக கூடிவிட்டதால், திரு. விஜய் அவர்களின் வாகன அணிவகுப்பு நீண்ட நேரம் சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற ஆபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவரது பிரசார கூட்டங்கள் பெரும் மக்களைக் கவர்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு, ‘Y’ வகை பாதுகாப்பு பெறும் நபராக இருப்பதால், சென்னை போலீசிடம் பலமுறை போதுமான பாதுகாப்பு, கூட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பான நகர்வு ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியிருந்தோம். ஆனால் இதுவரை எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொளத்தூர் பிரசார நிகழ்வில், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான குறைபாடுகள் இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர்கள் (barricades) அமைக்கப்படவில்லை. கூட்ட நிர்வாகம் முறையாக செய்யப்படவில்லை.

முக்கியமாக, பாதுகாப்பு வட்டாரம் (sterile zone) உருவாக்கப்படாததால், பிரசார வாகனம் பொதுமக்களால் முற்றிலும் சூழப்பட்டு, பெரும் நெரிசல் ஏற்பட்டது.

மேலும், பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட ஒலி அமைப்புகள் அகற்றப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கூட்டமாக வந்த பொதுமக்கள் உரையை கேட்க முடியாமல் முன் நோக்கி நெருங்கினர். இதனால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்து விபத்து அபாயம் ஏற்பட்டது.

மேலும், ஏற்கனவே நெரிசலான இடத்திற்கு பெரிய பேருந்துகள் அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குழப்பமும் நெரிசலும் அதிகரித்தது.

இந்த அனைத்து பாதுகாப்பு குறைபாடுகளும் பொதுமக்களுக்கும் பாதுகாக்கப்படும் நபரான திரு. விஜய் அவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சென்னை போலீசார் மேற்கொண்ட பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான தவறுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags: tamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisamith shanVijaytvktamilaga vetri kalagamtamil nadu election live
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

Next Post

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies