தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரா கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்தார்.
கரீம்நகரில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வெமுலவாடா ராஜ ராஜேஸ்வரா கோயில்.
இந்த கோயில் வளாகத்திற்குள் தர்கா ஒன்றும் உள்ளது. இங்கு சாதி, மத பேதம் இன்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ராஜ ராஜேஸ்வரா கோயிலில் தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.