“அதானி மற்றும் அம்பானியிடம் காங்கிரசார் தேர்தலுக்கு பணம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
“இளவரசர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் இணைந்து முன்பு 5 தொழில் அதிபர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் எனவும் பின்னர், அதானி மற்றும் அம்பானி மீது மட்டும் தாக்குதல் நடத்தினார்கள்” என்றும் குற்றம் சாட்டினுர்ரு்.
“அந்தக் காங்கிரசார் எல்லாம் தற்போது மவுனம் காத்து வரும் நிலையில் அவர்களது மவுனம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“தற்போது தேர்தல் நடைபெறுவதால், அவர்கள் தொழில் அதிபர்களிடம் கறுப்பு பணம் பெற்றுள்ளார்களோ? என்று சந்தேகம் எழுகிறது” என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு நிர்வாகி சாம்பிட்ரோடா கூறிய இனவெறி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
“இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்” எனவும் பிரதமர் மோடி உறுதியாகக் கூறினார்.