திண்டுக்கல்லில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் சைலன்சர்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 40 பேருந்துகள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து மொத்தமாக 72 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.