தெலங்கானாவில் விதிக்கப்படும் R.R வரி நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
R.R.R திரைப்படம் இந்தியாவின் பெயரை உலகளவில் முன்னுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், ரேவந்த் ரெட்டியின் R.R வரி நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
தெலங்கானாவில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் R.R வரியில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்த வேண்டும் எனவும், மொத்த வசூலில் கணிசமான பகுதி R.R வரியாக டெல்லிக்கு செல்கிறது எனவும் அவர் விமர்சித்தார்.