திருப்பத்தூரில் இரவு நேரத்தில் முகப்பு விளக்குகள் எரியாமல் அரசுப் பேருந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளைகுட்டை பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து முகப்பு விளக்குகள் இரண்டும் எரியாதபடி சென்றுகொண்டிருந்தது.
இரவு நேரத்தில் முகப்பு விளக்குகள் இல்லாமல் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் அவல நிலையை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.