தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப்பிரதேசம், ஏனாம், ராயல சீமா, தெலுங்கானா மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கேரளா, மாஹே மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் மே 11ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.