மதுரை அருகே தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உறங்கான்பட்டியைச் சேர்ந்தவர்கள் செல்லப்பாண்டி – சத்யா தம்பதிக்கு, 17 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த செல்லப்பாண்டி, வேறொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இருந்தபோதும் தனது மனைவி சத்யாவை அவ்வப்போது தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அத்தம்பதியின் மகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தை செல்லப்பாண்டியை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த ஒத்தக்கடை போலீசார், சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.