திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் முறையாக குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாயன அத்தியூரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தனிநபர் வீட்டின் அருகே பொது குடிநீர் குழாய் உடைந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் குழாயை சீரமைத்து முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி, அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.