பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலையில் கடல் அலையின் சீற்றம் காரணமாக சாலையில் கடல் நீர் புகுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கடல் அலை சீற்றம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, பழைய முகத்துவாரம் அருகில் கருங்காலி கிராமத்தில் உள்ள சாலை பகுதியில் கடல் நீர் வழிந்தோடுகிறது.
இதனால், அந்த வழியாக அன்றாட பணிகளுக்கு செல்லும் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
மேலும், கடல் நீரால் உருவான மணல்மேட்டை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.