தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவை ஒட்டி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வீரசக்கதேவி கோயில் திருவிழா நடைபெறுவதால், இன்று மாலை 6 மணி முதல் 12-ம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே இடத்தில் 5 -க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.