திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் சொகுசு விடுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விவசாய நிலத்தில் கலப்பதால் பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கோட்டூர் கீழ்கொள்ளை வட்டம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அருகில் உள்ள விவசாய நிலங்களில் கலப்பதால், பயிர்கள் கருகுவதாகவும், துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகின்றனர் .