ரோபோடிக்ஸ் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முறையை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அப்பல்லோ கேன்சர் சென்டரின் சிறப்பு மருத்துவர் அஜித் பை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் அப்போலோ மருத்துவனையில் 160 ரோபோட்கள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன என்றும், குணமான நோயாளிகளின் அறிக்கையை கொண்டு அரசிடம் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுக்க உள்ளோம் எனவும் அவர் கூறினார்.