சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே சருகணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவலையடுத்து ஆய்வு செய்த போலீசார், சருகணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த பாண்டியராஜன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ஜேசிபி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டன.