கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலத்தில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரியநாயக்கம்பாளையத்தில் சுமார் 115 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம், மழைநீர் வடிகால் இல்லாததால் குளம்போல் காட்சியளித்தது.
இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பாலத்தில் துளை அமைத்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.