தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்கள் வீட்டில் வளர்க்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும், தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 6ஆம் தேதி சென்னையில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் இன வளர்ப்பு நாய்கள் தாக்கியதால், மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராட்வீலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைப்பவை என பட்டியிலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த வகை நாய்களை இறக்குமதி செய்யவும், வீட்டில் வளர்க்கவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நாய் வளர்ப்போர் பொது இடங்களில் அழைத்து செல்லும்போது, கட்டாயமாக சங்கிலியால் கட்டியும், முகக் கவசம் அணிந்தும் கூட்டி செல்ல வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.