ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 16 பேரும் விரைவில் மீட்கப்படுவர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய மாலுமிகள் 17 பேருடன் பயணித்த கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சிறைபிடித்தது.
இதில் கேரளாவை சேர்ந்த ஆனி டெசா ஜோசப் என்பவர் அண்மையில் தாயகம் திரும்பினார்.
மீதமுள்ள 16 பேரும் விரைவில் மீட்கப்படுவர் என்றும், இதுதொடர்பாக ஈரான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.