கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாய்களிடம் கடிபட்ட ஆண் புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
நெய்தலூர் பகுதியில் வழிதவறி வந்த புள்ளிமானை, நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மானை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் தகவல் அளித்ததின் பேரில், அதிகாரிகள் மானை மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.
















