சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 9 -ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
"விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். " – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 9, 2024
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.