இந்தியர்கள் கருப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கிழக்கு இந்தியாவில் இருப்பவர்கள் சீனர்கள் போலவும், மேற்கில் வசிப்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக சாம் பிட்ரோடா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியர்கள் சிலர் வெள்ளையர் போலவும், சிலர் கருப்பர்கள் போலவும் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் இங்கு வசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள் என அவர் அழைப்பதாக பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஜாத் பூனவல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அதனால் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் உள்ளாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.