வேலூர் அருகே விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்டில் இருந்து எர்ணாகுளம் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயிலில், ரயில்வே போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பொதுப் பயணிகள் பெட்டியில் 14 மூட்டைகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ் குமார், பிரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.