தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே மின்கம்பத்தில் மின் இணைப்பை சரி செய்ய முயன்ற ஒப்பந்த ஊழியர், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேல சொக்கம்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் விவேகானந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார், விவேகானந்தனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.