திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 30.ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் காலை முதல் அம்மனுக்கு கரகம் ஜோடித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து அக்னி சட்டி ஆட்டக் குழுவைச் சேர்ந்த 20- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.