தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சொத்து பிரச்சினையால் சகோதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெட்டு காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சங்கரன்கோவிலை சேர்ந்த முருகன் மற்றும் அவரது உடன் பிறந்த தம்பி செந்தில் இடையே நீண்ட நாட்களாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் காவேரி நகர் அருகே சென்றுகொண்டிருந்த முருகனை, அவரது தம்பி செந்தில் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.