தென்காசி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இலஞ்சி பகுதியை சேர்ந்த ஆனந்த் சென்ற இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.