சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி கழனி வாசலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசர், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.