மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தன் அன்பு சகோதரரும், இனிய நண்பருமான கேப்டனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை கண்டு திரையுலகமே மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தங்களது அன்னை இல்லம் சார்பில் விஜயகாந்தின் குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் நடிகர் பிரபு கூறியுள்ளார்.