ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என கேட்பதை காங்கிரஸ் நிறுத்தி விட்டதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மல்கிங்கிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது பாஜக 400 தொகுதிகளை ஏன் கைப்பற்ற வேண்டும் பலர் கேட்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
காங்கிரசால் ராமர் கோயில் உள்ள இடத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்ட முடியும் என்றும், அதனை தடுக்கவே பாஜக 400 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.