கடந்த 2023-ஆம் ஆண்டில் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.
இதில், 28 கோடியே 61 லட்சம் பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 11 லட்சத்து 75 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை போன்ற மலைவாசஸ்தலங்களையும், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற ஆன்மிக நகரங்களுக்கும் ஏராளமானோர் வருகை தந்ததாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.