நாகை மாவட்டம் நாகூர் அருகே சிபிசிஎல் விரிவாக்கப் பணிக்காக பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
பனங்குடியில் மத்திய அரசின் நிறுவனமான சிபிசிஎல் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதற்கான நில அளவீடு செய்யும் பணி தொடங்கும் போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.