பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சஞ்சய் தண்டன், ஹரியானா முதல்வர் நயப் சிங் சைனியுடன் இணைந்து சண்டீகரில் பிரம்மாண்ட பேரணி மேற்கொண்டார்.
அப்போது அவர்களுக்கு பாஜக தொண்டர்கள் மேளதாளம் முழங்க, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய சஞ்சய் தண்டன், சண்டீகரை இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக மாற்றுவேன் என வாக்குறுதியளித்தார்.