திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் சுமார் இரண்டு கோடியே 24 லட் ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி முருன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது ரொக்கமாக 2 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 568 ரூபாயும், 848 கிராம் தங்கமும், சுமார் 14 கிலோ வெள்ளியும், வெளிநாட்டு கரன்சி 409 நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது.